Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:47 — மக்கள் கூட்டங்கள்

பூமியில் உள்ள அனைத்தையும், இன்னும் அதைப்போல் இருமடங்கையும் வரம்பு மீறியவர்கள் சொந்தமாகக் கொண்டிருந்தாலும், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று பயங்கரமான தண்டனையைத் தவிர்த்துக் கொள்ள உடனடியாக அவர்கள் அதனை விட்டுக் கொடுத்து விடுவார்கள். அவர்கள் ஒருபோதும் எதிர்பாராத வற்றைக் கடவுள் அவர்களுக்குக் காட்டுவார்.

[39:46] “எங்கள் இறைவா, வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவரே, அனைத்து இரகசியங்களையும் மற்றும் அறிவிப்புகளையும் அறிந்தவரே, உம்முடைய அடியார்களுக்கிடையில் அவர் களுடைய தர்க்கங்களைக் குறித்து தீர்ப்பளிக் கின்ற ஒரே ஒருவர் நீர்தான்,” என்று பிரகடனம் செய்வீராக.

[39:48] அவர்கள் சம்பாதித்த பாவகரமான காரியங்கள் அவர்களுக்குக் காட்டப்படும், மேலும் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த அதே விஷயங்கள் அவர்களை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யத் திரும்பி விடும்.