Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:1 — பெண்கள்

மனிதர்களே, உங்களுடைய இரட்சகரை கவனத்தில் கொள்ளுங்கள், அவர் உங்கள் யாவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து படைத்தார், பின்னர் அதிலிருந்து அதன் துணையைப் படைத்தார், பின்னர் அவ்விருவரிலிருந்து, ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தார். எவர் மீது நீங்கள் சத்தியப் பிரமாணம் செய்கின்றீர்களோ அந்த கடவுள்-ஐக் கண்ணியப்படுத்துங்கள், மேலும் பெற்றோர்களையும் கண்ணியப்படுத்துங்கள். கடவுள் உங்களை * கண்காணிப்பவராக இருக்கின்றார்.

[4:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[4:2] அநாதைகளுக்குரிய சொத்துக்களை அவர் களிடம் நீங்கள் ஒப்படைத்து விட வேண்டும். நல்லவற்றிற்கு பதிலாக கெட்டவற்றை மாற்றிக் கொள்ளாதீர்கள்,மேலும் அவர்களுடைய சொத்துக்களை உங்களுடையதுடன் சேர்த்து செலவழித்து விடாதீர்கள். இது மிகப்பெரிய அநீதியாகும்.