குர்ஆன் 4:2 — பெண்கள்
அநாதைகளுக்குரிய சொத்துக்களை அவர் களிடம் நீங்கள் ஒப்படைத்து விட வேண்டும். நல்லவற்றிற்கு பதிலாக கெட்டவற்றை மாற்றிக் கொள்ளாதீர்கள்,மேலும் அவர்களுடைய சொத்துக்களை உங்களுடையதுடன் சேர்த்து செலவழித்து விடாதீர்கள். இது மிகப்பெரிய அநீதியாகும்.
[4:1] மனிதர்களே, உங்களுடைய இரட்சகரை கவனத்தில் கொள்ளுங்கள், அவர் உங்கள் யாவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து படைத்தார், பின்னர் அதிலிருந்து அதன் துணையைப் படைத்தார், பின்னர் அவ்விருவரிலிருந்து, ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தார். எவர் மீது நீங்கள் சத்தியப் பிரமாணம் செய்கின்றீர்களோ அந்த கடவுள்-ஐக் கண்ணியப்படுத்துங்கள், மேலும் பெற்றோர்களையும் கண்ணியப்படுத்துங்கள். கடவுள் உங்களை * கண்காணிப்பவராக இருக்கின்றார்.
[4:3] அநாதைகளுக்கு நலம் பயக்கும் என்று நீங்கள் எண்ணினால், அவர்களுடைய தாய்மார்களை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்-இருவரையோ, மூவரையோ அல்லது நால்வரையோ நீங்கள் மணந்து கொள்ளலாம். நியாயமில்லாதவராக ஆகிவிடுவோமோ என்று நீங்கள் அஞ்சினால் ஒருவரை மட்டும் கொண்டோ அல்லது உங்களிடம் ஏற்கனவே உள்ளதைக் கொண்டோ நீங்கள் திருப்தி கொள்ளுங்கள். கூடுதலாக, இவ்விதமாக செய்து உங்களுக்கு ஏற்படக்கூடிய பணக் கஷ்டத்தையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ளலாம்.