Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:3 — பெண்கள்

وَإِن خِفتُم أَلّا تُقسِطوا فِى اليَتٰمىٰ فَانكِحوا ما طابَ لَكُم مِنَ النِّساءِ مَثنىٰ وَثُلٰثَ وَرُبٰعَ ۖ فَإِن خِفتُم أَلّا تَعدِلوا فَوٰحِدَةً أَو ما مَلَكَت أَيمٰنُكُم ۚ ذٰلِكَ أَدنىٰ أَلّا تَعولوا

அநாதைகளுக்கு நலம் பயக்கும் என்று நீங்கள் எண்ணினால், அவர்களுடைய தாய்மார்களை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்-இருவரையோ, மூவரையோ அல்லது நால்வரையோ நீங்கள் மணந்து கொள்ளலாம். நியாயமில்லாதவராக ஆகிவிடுவோமோ என்று நீங்கள் அஞ்சினால் ஒருவரை மட்டும் கொண்டோ அல்லது உங்களிடம் ஏற்கனவே உள்ளதைக் கொண்டோ நீங்கள் திருப்தி கொள்ளுங்கள். கூடுதலாக, இவ்விதமாக செய்து உங்களுக்கு ஏற்படக்கூடிய பணக் கஷ்டத்தையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ளலாம்.

[4:2] அநாதைகளுக்குரிய சொத்துக்களை அவர் களிடம் நீங்கள் ஒப்படைத்து விட வேண்டும். நல்லவற்றிற்கு பதிலாக கெட்டவற்றை மாற்றிக் கொள்ளாதீர்கள்,மேலும் அவர்களுடைய சொத்துக்களை உங்களுடையதுடன் சேர்த்து செலவழித்து விடாதீர்கள். இது மிகப்பெரிய அநீதியாகும்.

[4:4] நீங்கள் பெண்களுக்கு அவர்களுக்கு தகுந்த வரதட்சணைகளை நியாயமாக கொடுக்க வேண்டும். அவர்கள் தாமாக விரும்பி எதையாவது விட்டுக் கொடுத்தால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளலாம். அது உங்களுக்கு உரிமையுடையதாகும்.