குர்ஆன் 4:110 — பெண்கள்
எவர் ஒருவர் பாவம் செய்து விட்டோ, அல்லது தன் ஆன்மாவிற்கு தீங்கிழைத்துவிட்டோ, பின்னர் பாவ மன்னிப்பிற்காக கடவுள்-ஐ இறைஞ்சிப் பிரார்த்திப்பாரேயானால், மன்னிக்கக் கூடிய வராகவும்,மிக்க கருணையாளராகவும் கடவுள்-ஐக் காண்பார்.
[4:109] இங்கு நீங்கள் இந்த உலகத்தில் அவர்களின் சார்பில் வாதிடுகின்றீர்கள்; மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளில் அவர்களின் சார்பில் கடவுள்-உடன் வாதாடப்போவது யார்? அவர்களின் வழக்கறிஞராக இருக்கப்போவது யார்?
[4:111] எவர் ஒருவர் ஒரு பாவத்தைச் சம்பாதிக்கின்றாரோ, அவர் தன் சொந்தஆன்மாவிற்குக் கேடாகவே அதைச் சம்பாதிக்கின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.