குர்ஆன் 4:114 — பெண்கள்
தர்மத்தை அல்லது நன்னெறியான செயல்களை அல்லது மக்களுக்கிடையில் அமைதி ஏற்படுத்து வதை ஆதரிப்பவர்களுக்கு தவிர அவர்களு டைய இரகசியக் கூட்டங்களைக் குறித்து வேறு எந்த நன்மையும் இல்லை. எவர் ஒருவர் கடவுள்-ன் போதனைகளுக்கு பதிலளிக்கும்படியாக இதைச் செய்கின்றாரோ அவருக்கு நாம் மகத்தான
[4:113] கடவுள்-ன் அருளும் மேலும் அவரது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால், அவர்களில் சிலர் உம்மை வழி தவறச் செய்திருப் பார்கள். அவர்கள் தங்களை மட்டுமே தவறான வழியில் செலுத்திக்கொள்கின்றனர் மேலும் உமக்கு அவர்கள் ஒருபோதும் சிறிதளவும் தீங்கிழைத்து விட இயலாது, கடவுள் உமக்கு வேதத் தையும், ஞானத்தையும் இறக்கி அனுப்பியுள்ளார், மேலும் உமக்கு அவர், நீர் ஒரு போதும் அறிந்திராதவற்றைக் கற்றுக் கொடுத்துள்ளார். உண்மையில், உம்மீதான கடவுள்-ன் அருட்கொடை மகத்தானது.
[4:115] வழிகாட்டல் சுட்டிக்காட்டப்பட்ட பின்னர், தூதரை எதிர்த்துக் கொண்டும் மேலும் நம்பிக்கையாளர் களின் வழியல்லாததைப் பின்பற்றிக் கொண்டும், இருப்பவரைப் பொறுத்தவரை, அவர் தேர்ந் தெடுத்த வழியிலேயே நாம் அவரைச் செலுத்தி மேலும் அவரை நரகிற்கு அனுப்புவோம். என்ன ஒரு துக்ககரமான விதி!