குர்ஆன் 4:116 — பெண்கள்
கடவுள், இணைத்தெய்வவழிபாடு செய்வதை (மரணிக்கும் வரை கடைபிடித்தால்) *மன்னிக்கவே மாட்டார், மேலும் அதைவிடக் குறைவான குற்றங்களை, தான் நாடுகின்றவர்களுக்கு மன்னிக்கின்றார். கடவுள்-உடன் எந்த இணைத்தெய்வத்தையும் வழிபடுகின்ற எவர் ஒருவரும் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டார்.
[4:115] வழிகாட்டல் சுட்டிக்காட்டப்பட்ட பின்னர், தூதரை எதிர்த்துக் கொண்டும் மேலும் நம்பிக்கையாளர் களின் வழியல்லாததைப் பின்பற்றிக் கொண்டும், இருப்பவரைப் பொறுத்தவரை, அவர் தேர்ந் தெடுத்த வழியிலேயே நாம் அவரைச் செலுத்தி மேலும் அவரை நரகிற்கு அனுப்புவோம். என்ன ஒரு துக்ககரமான விதி!
[4:117] அவர்கள் அவரைத் தவிர பெண்தெய்வங்களைக் கூட வழிபடுகின்றனர், உண்மை நிலவரப்படி, அவர்கள் கலகக்கார சாத்தானையே வழிபடுகின்றார்கள்.