குர்ஆன் 4:119 — பெண்கள்
“நான் அவர்களை வழிகெடுப்பேன், நான் அவர்களை வசீகரிப்பேன், (சில வகை மாமிசங் களை உண்பதை விட்டும் தடைசெய்யும்படியாக) கால்நடைகளின் காதுகளில் அடையாளமிட நான் அவர்களுக்குக் கட்டளையிடுவேன், மேலும் கடவுள்-ன் படைப்பினை உருக்குலைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிடுவேன்.” எவர் ஒருவர் கடவுள்-க்கு பதிலாக சாத்தானை ஒரு இரட்சகராக ஏற்றுக்கொள்கின்றாரோ, அவர் ஆழ்ந்ததோர் நஷ்டத்திற்கு உள்ளாகிவிட்டார்.
[4:118] கடவுள் அவனை தண்டனைக்கென தீர்மானித்து விட்டார், மேலும் அவன் கூறினான், “நான் நிச்சயமாக உம்மை வழிபடுவோரில்* ஒரு குறிப்பிட்ட தொகையினரை அணி சேர்த்துக் கொள்வேன்.
[4:120] அவன் அவர்களுக்கு வாக்களிக்கின்றான் மேலும் அவர்களை வசீகரிக்கின்றான்; சாத்தான் வாக்களிப்பது எதுவாயினும் அது ஒரு மாயையே அன்றி வேறில்லை.