குர்ஆன் 4:120 — பெண்கள்
அவன் அவர்களுக்கு வாக்களிக்கின்றான் மேலும் அவர்களை வசீகரிக்கின்றான்; சாத்தான் வாக்களிப்பது எதுவாயினும் அது ஒரு மாயையே அன்றி வேறில்லை.
[4:119] “நான் அவர்களை வழிகெடுப்பேன், நான் அவர்களை வசீகரிப்பேன், (சில வகை மாமிசங் களை உண்பதை விட்டும் தடைசெய்யும்படியாக) கால்நடைகளின் காதுகளில் அடையாளமிட நான் அவர்களுக்குக் கட்டளையிடுவேன், மேலும் கடவுள்-ன் படைப்பினை உருக்குலைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிடுவேன்.” எவர் ஒருவர் கடவுள்-க்கு பதிலாக சாத்தானை ஒரு இரட்சகராக ஏற்றுக்கொள்கின்றாரோ, அவர் ஆழ்ந்ததோர் நஷ்டத்திற்கு உள்ளாகிவிட்டார்.
[4:121] இவர்கள் நரகத்தை தங்களின் கடைசித் தங்குமிடமாக ஆக்கிக்கொண்டார்கள், மேலும் அதிலிருந்து ஒரு போதும் தப்பித்துக் கொள்ள இயலாது.