குர்ஆன் 4:128 — பெண்கள்
ஒரு பெண் தன் கணவனிடமிருந்து கொடுமை யையோ, அல்லது கைவிடப்படுவதையோ உணர்ந்தால், அத்தம்பதியர் தங்களது வேறுபாடு களைக் களைய முயல வேண்டும். ஏனெனில் இணக்கமாகிக் கொள்வதே அவர்களுக்கு நல்லது, சுயநலம் என்பது மனித சுபாவ மாகும்,மேலும் நீங்கள் நன்மை புரிந்து மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்தினால், நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[4:127] பெண்களைக் குறித்து அவர்கள் உம்மிடம் ஆலோசிக்கின்றார்கள்; “கடவுள் அவர்களைக் குறித்து, வேதத்தில் உங்களுக்கு எடுத்துரைத்துள்ள படியே அறிவுறுத்துகின்றார். நீங்கள் அநாதைப் பெண்களை மணந்து கொள்ள விரும்பும் போது, அவர்களுக்குரிய வரதட் சணைத் தொகையைத் தராது நீங்கள் ஏமாற்றிய அந்த உரிமைகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும். நீங்கள் அவர்களை உங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளக் கூடாது. அத்துடன் அநாதைச் சிறுவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அநாதைகளை நீங்கள் நீதமாக நடத்த வேண்டும். நீங்கள் நல்லது எதனைச் செய்தாலும் கடவுள் அதனை முற்றிலும் அறிந்தவர் ஆவார்,” என்று கூறுவீராக.
[4:129] நீங்கள் எவ்வளவுதான் கடினமாக முயன்றாலும், ஒரு மனைவிக்கு மேல் நிர்வகிக்கும் போது, நீங்கள் ஒரு போதும் நீதமாக இருக்க இயலாது. ஆகையால், (திருமணத்தை அனுபவித்து மகிழ இயலாமலும் அன்றி இன்னொருவரைத் திருமணம் செய்ய விடாமலும்) அவர்களில் ஒருவரைத் தொங்கலில் விட்டு விடும் அளவிற்கு பாரபட்சமாக இருக்காதீர்கள். நீங்கள் இச் சூழ்நிலையைச் சீர் செய்து மேலும் நன்னெறியைப் பேணிவந்தால், கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.