குர்ஆன் 4:129 — பெண்கள்
நீங்கள் எவ்வளவுதான் கடினமாக முயன்றாலும், ஒரு மனைவிக்கு மேல் நிர்வகிக்கும் போது, நீங்கள் ஒரு போதும் நீதமாக இருக்க இயலாது. ஆகையால், (திருமணத்தை அனுபவித்து மகிழ இயலாமலும் அன்றி இன்னொருவரைத் திருமணம் செய்ய விடாமலும்) அவர்களில் ஒருவரைத் தொங்கலில் விட்டு விடும் அளவிற்கு பாரபட்சமாக இருக்காதீர்கள். நீங்கள் இச் சூழ்நிலையைச் சீர் செய்து மேலும் நன்னெறியைப் பேணிவந்தால், கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[4:128] ஒரு பெண் தன் கணவனிடமிருந்து கொடுமை யையோ, அல்லது கைவிடப்படுவதையோ உணர்ந்தால், அத்தம்பதியர் தங்களது வேறுபாடு களைக் களைய முயல வேண்டும். ஏனெனில் இணக்கமாகிக் கொள்வதே அவர்களுக்கு நல்லது, சுயநலம் என்பது மனித சுபாவ மாகும்,மேலும் நீங்கள் நன்மை புரிந்து மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்தினால், நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[4:130] அத்தம்பதியர் கண்டிப்பாகப் பிரிந்து விட தீர்மானித்துவிட்டால், கடவுள் அவர்களில் ஒவ்வொருவருக்கும் தன் அருட்கொடைகளி லிருந்து வழங்குவார். கடவுள் தாராளமானவர், ஞானம் மிக்கவர்.