Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:130 — பெண்கள்

அத்தம்பதியர் கண்டிப்பாகப் பிரிந்து விட தீர்மானித்துவிட்டால், கடவுள் அவர்களில் ஒவ்வொருவருக்கும் தன் அருட்கொடைகளி லிருந்து வழங்குவார். கடவுள் தாராளமானவர், ஞானம் மிக்கவர்.

[4:129] நீங்கள் எவ்வளவுதான் கடினமாக முயன்றாலும், ஒரு மனைவிக்கு மேல் நிர்வகிக்கும் போது, நீங்கள் ஒரு போதும் நீதமாக இருக்க இயலாது. ஆகையால், (திருமணத்தை அனுபவித்து மகிழ இயலாமலும் அன்றி இன்னொருவரைத் திருமணம் செய்ய விடாமலும்) அவர்களில் ஒருவரைத் தொங்கலில் விட்டு விடும் அளவிற்கு பாரபட்சமாக இருக்காதீர்கள். நீங்கள் இச் சூழ்நிலையைச் சீர் செய்து மேலும் நன்னெறியைப் பேணிவந்தால், கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[4:131] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது, மேலும் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்க வேண்டும் என்று நாம் உங்களுக்கு முன்னர் வேதத்தைப் பெற்றவர் களுக்கு கட்டளையிட்டிருக்கின்றோம், இன்னும் உங்களுக்கும் கட்டளையிட்டோம். மேலும் நீங்கள் நம்ப மறுத்துவிட்டால், பின்னர் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது. கடவுள் தேவையற்றவர், புகழுக்குரியவர்.