குர்ஆன் 4:138 — பெண்கள்
நயவஞ்சகர்களிடம், அவர்கள் வலிமிகுந்த தண்டனைக்கு உள்ளாகிவிட்டார்கள் என்று அறிவிப்பீராக.
[4:137] நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, பின்னர் நம்ப மறுத்து, பின்னர் நம்பிக்கை கொண்டு, பின்னர் நம்ப மறுத்து, பின்னர் நம்ப மறுத்தலில் ஆழமாக மூழ்கி விடுகின்றார்களோ, அவர்களைக் கடவுள் மன்னிக்கமாட்டார், அன்றி அவர்களை எந்த வழியிலும் வழி நடத்தமாட்டார்.
[4:139] அவர்கள்தான் நம்பிக்கையாளர்களுடன் அல்லாது நம்பமறுப்பவர்களுடன் தங்கள் நட்புறவை வைத்துக் கொள்பவர்கள். அவர்களிடத்தில் கண்ணியத்தை அவர்கள் தேடுகின்றனரா? எல்லாக் கண்ணியமும் கடவுள்-க்கு மட்டுமே உரியது.