Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:142 — பெண்கள்

நயவஞ்சகர்கள் தாங்கள் கடவுள்-ஐ ஏமாற்றிக் கொண்டிருப்பதாக எண்ணுகின்றார்கள், ஆனால் அவர்தான் அவர்களை அவ்வாறு வழி நடத்துகின்றார். தொடர்புத் தொழுகைக்காக (ஸலாத்) அவர்கள் எழுந்து நிற்கும் போது, அவர்கள் சோம்பலாக எழுந்து நிற்கின்றார்கள். அது ஏனெனில் அவர்கள் மக்களுக்கு முன்னால் காட்டிக் கொள்வதற்காக மட்டுமே இதைச் செய்கின்றார்கள், மேலும் அரிதாகவே அவர்கள் கடவுள்-ஐப்பற்றி நினைக்கின்றார்கள்.

[4:141] அவர்கள் உங்களைக் கவனித்தவாறு காத்திருக் கின்றனர்; கடவுள்-இடமிருந்து நீங்கள் வெற்றியை அடைந்தால் (உங்களிடம்) அவர்கள் “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று கூறுகின்றார்கள். ஆனால் நம்ப மறுப்பவர் களுக்கு ஒரு வாய்ப்பு அமைந்தால் (அவர்களிடம்) “நாங்கள் உங்கள் பக்கம் நின்று மேலும் நம்பிக்கையாளர்களிடம் இருந்து உங்களைப் பாதுகாக்கவில்லையா?” என்று அவர்கள் கூறுகின்றார்கள். கடவுள் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளில் உங்களுக்கிடையில் தீர்ப்புச் செய்வார். கடவுள் நம்ப மறுப்பவர்களை, நம்பிக்கையாளர்களை மிகைத்து வெற்றி கொள்ளும்படி ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்.

[4:143] அவர்கள் இந்தக் கூட்டத்தோடும் சேராமல், அந்தக் கூட்டத்தோடும் இல்லாமல் நடுவில் தடுமாறுகின்றார்கள். எவரை கடவுள் வழி கேட்டில் அனுப்பிவிடுகின்றாரோ, அவரை வழிநடத்தும் வழியொன்றை ஒரு போதும் நீர் காணமாட்டீர்.