Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:143 — பெண்கள்

அவர்கள் இந்தக் கூட்டத்தோடும் சேராமல், அந்தக் கூட்டத்தோடும் இல்லாமல் நடுவில் தடுமாறுகின்றார்கள். எவரை கடவுள் வழி கேட்டில் அனுப்பிவிடுகின்றாரோ, அவரை வழிநடத்தும் வழியொன்றை ஒரு போதும் நீர் காணமாட்டீர்.

[4:142] நயவஞ்சகர்கள் தாங்கள் கடவுள்-ஐ ஏமாற்றிக் கொண்டிருப்பதாக எண்ணுகின்றார்கள், ஆனால் அவர்தான் அவர்களை அவ்வாறு வழி நடத்துகின்றார். தொடர்புத் தொழுகைக்காக (ஸலாத்) அவர்கள் எழுந்து நிற்கும் போது, அவர்கள் சோம்பலாக எழுந்து நிற்கின்றார்கள். அது ஏனெனில் அவர்கள் மக்களுக்கு முன்னால் காட்டிக் கொள்வதற்காக மட்டுமே இதைச் செய்கின்றார்கள், மேலும் அரிதாகவே அவர்கள் கடவுள்-ஐப்பற்றி நினைக்கின்றார்கள்.

[4:144] நம்பிக்கை கொண்டோரே, நம்பிக்கையாளர் களுடன் அல்லாது நம்ப மறுப்பவர்களுடன் நீங்கள் நட்புறவு கொள்ளவேண்டாம். உங்களுக்கு எதிராக கடவுள்-இடத்தில் ஒரு தெளிவான சான்றினைத் தர விரும்புகின்றீர்களா?