குர்ஆன் 4:151 — பெண்கள்
இவர்கள்தான் உண்மையான நம்பமறுப்பவர்கள். நம்ப மறுப்பவர்களுக்கு இழிவு நிறைந்ததோர் தண்டனையை நாம் தயார் செய்து வைத்திருக் கின்றோம்.
[4:150] கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் நம்ப மறுத்து மேலும் கடவுள்-க்கும் அவருடைய தூதர்களுக்கும் இடையில் பேதம் ஏற்படுத்த நாடி, மேலும், “ நாங்கள் சிலர் மீது நம்பிக்கை கொள்கின்றோம்; இன்னும் சிலரை நிராகரிக்கின் றோம்,” என்று கூறுபவர்கள், மேலும் இடைப்பட்ட ஒரு பாதையை பின்பற்ற விரும்புகின்றவர்கள்;
[4:152] கடவுள் மீதும் அவருடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொண்டு, மேலும் அவர்களுக் கிடையில் எவ்வித பேதமும் செய்யாமல் இருப்ப வர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு அவர்க ளுடைய வெகுமதியினை அவர் வழங்குவார், கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.