குர்ஆன் 4:160 — பெண்கள்
அவர்களின் வரம்பு மீறல்களின் காரணமாகவும், மேலும் தொடர்ச்சியாக கடவுள்-ன் பாதையை விட்டும் தடுத்துக் கொண்டிருந்ததாலும், யூதர் களுக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தவற்றில் நல்ல உணவுகளை அவர்களுக்கு நாம் தடைசெய்தோம்.
[4:159] வேதத்தை உடையவர்களில் ஒவ்வொருவரும் அவரது மரணத்திற்கு முன்பாக அவர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியமா யிருந்தது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில், அவர்களுக்கெதிராக அவர் ஒரு சாட்சியாக இருப்பார்.
[4:161] மேலும் தடை செய்யப்பட்ட கடும் வட்டியை செயல் படுத்தியதாலும், மேலும் மக்களின் பணத்தைச் சட்ட விரோதமான முறையில் உட்கொண்டதாலும், அவர்களில் உள்ள நம்பமறுப்பவர்களுக்கு வலிமிகுந்த தண்டனையை நாம் தயார் செய்து வைத்துள்ளோம்.