குர்ஆன் 4:163 — பெண்கள்
إِنّا أَوحَينا إِلَيكَ كَما أَوحَينا إِلىٰ نوحٍ وَالنَّبِيّۦنَ مِن بَعدِهِ ۚ وَأَوحَينا إِلىٰ إِبرٰهيمَ وَإِسمٰعيلَ وَإِسحٰقَ وَيَعقوبَ وَالأَسباطِ وَعيسىٰ وَأَيّوبَ وَيونُسَ وَهٰرونَ وَسُلَيمٰنَ ۚ وَءاتَينا داوۥدَ زَبورًا
நோவாவிற்கும் அவரைத் தொடர்ந்து வந்த வேதம் வழங்கப்பட்டவர்களுக்கும் உள்ளுணர்வு அளித்தது போலவே, உமக்கும் நாம் உள்ளு ணர்வு அளித்துள்ளோம். மேலும் ஆப்ரஹாம், இஸ்மவேல், ஐசக், ஜேக்கப், குலத் தலைவர்கள், இயேசு, ஜோப், ஜோனா, ஆரோன் மற்றும் ஸாலமன் ஆகியோருக்கும், நாம் உள்ளுணர்வு அளித்தோம் - இன்னும் டேவிட்டிற்கு சங்கீதம் தந்தோம்.
[4:162] அவர்களுக்கிடையில் அறிவில் நன்கு ஊன்றியவர்கள், மற்றும் நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் உமக்கு என்ன வெளிப்படுத்தப் பட்டதோ அதையும், மேலும் உமக்கு முன்னர் என்ன வெளிப்படுத்தப்பட்டதோ அதையும் நம்புகின்றார்கள். அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைபிடிப்பவர்கள், மேலும் கடமையான தர்மத்தை (ஜகாத்) கொடுப்பவர்கள்; அவர்கள் கடவுள் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்பவர்கள் இத்தகையவர்களுக்கு நாம் ஒரு மகத்தான வெகுமதி வழங்குவோம்.
[4:164] தூதர்கள் பற்றி உம்மிடம் கூறியும் உள்ளோம், மேலும் நாம் தூதர்களைப் பற்றி உம்மிடம் ஒரு போதும் கூறாமலும் உள்ளோம். மேலும் மோஸஸிடம் கடவுள் நேரடியாக பேசினார்.