குர்ஆன் 4:162 — பெண்கள்
அவர்களுக்கிடையில் அறிவில் நன்கு ஊன்றியவர்கள், மற்றும் நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் உமக்கு என்ன வெளிப்படுத்தப் பட்டதோ அதையும், மேலும் உமக்கு முன்னர் என்ன வெளிப்படுத்தப்பட்டதோ அதையும் நம்புகின்றார்கள். அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைபிடிப்பவர்கள், மேலும் கடமையான தர்மத்தை (ஜகாத்) கொடுப்பவர்கள்; அவர்கள் கடவுள் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்பவர்கள் இத்தகையவர்களுக்கு நாம் ஒரு மகத்தான வெகுமதி வழங்குவோம்.
[4:161] மேலும் தடை செய்யப்பட்ட கடும் வட்டியை செயல் படுத்தியதாலும், மேலும் மக்களின் பணத்தைச் சட்ட விரோதமான முறையில் உட்கொண்டதாலும், அவர்களில் உள்ள நம்பமறுப்பவர்களுக்கு வலிமிகுந்த தண்டனையை நாம் தயார் செய்து வைத்துள்ளோம்.
[4:163] நோவாவிற்கும் அவரைத் தொடர்ந்து வந்த வேதம் வழங்கப்பட்டவர்களுக்கும் உள்ளுணர்வு அளித்தது போலவே, உமக்கும் நாம் உள்ளு ணர்வு அளித்துள்ளோம். மேலும் ஆப்ரஹாம், இஸ்மவேல், ஐசக், ஜேக்கப், குலத் தலைவர்கள், இயேசு, ஜோப், ஜோனா, ஆரோன் மற்றும் ஸாலமன் ஆகியோருக்கும், நாம் உள்ளுணர்வு அளித்தோம் - இன்னும் டேவிட்டிற்கு சங்கீதம் தந்தோம்.