குர்ஆன் 4:164 — பெண்கள்
தூதர்கள் பற்றி உம்மிடம் கூறியும் உள்ளோம், மேலும் நாம் தூதர்களைப் பற்றி உம்மிடம் ஒரு போதும் கூறாமலும் உள்ளோம். மேலும் மோஸஸிடம் கடவுள் நேரடியாக பேசினார்.
[4:163] நோவாவிற்கும் அவரைத் தொடர்ந்து வந்த வேதம் வழங்கப்பட்டவர்களுக்கும் உள்ளுணர்வு அளித்தது போலவே, உமக்கும் நாம் உள்ளு ணர்வு அளித்துள்ளோம். மேலும் ஆப்ரஹாம், இஸ்மவேல், ஐசக், ஜேக்கப், குலத் தலைவர்கள், இயேசு, ஜோப், ஜோனா, ஆரோன் மற்றும் ஸாலமன் ஆகியோருக்கும், நாம் உள்ளுணர்வு அளித்தோம் - இன்னும் டேவிட்டிற்கு சங்கீதம் தந்தோம்.
[4:165] நற்செய்திகளையும், அதே சமயம் எச்சரிக்கை களையும் ஒப்படைப்பவர்கள் தூதர்கள். இவ்விதமாக, இந்த தூதர்கள் அனைவரும் மனிதர்களிடம் வந்துவிட்ட பின்னர் கடவுள்-ஐச் சந்திக்கும் போது அவர்களுக்கு சாக்குப் போக்கு எதுவும் இருக்காது. கடவுள் சர்வ வல்லமை யுடைவர், ஞானம் மிக்கவர்.