Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:165 — பெண்கள்

நற்செய்திகளையும், அதே சமயம் எச்சரிக்கை களையும் ஒப்படைப்பவர்கள் தூதர்கள். இவ்விதமாக, இந்த தூதர்கள் அனைவரும் மனிதர்களிடம் வந்துவிட்ட பின்னர் கடவுள்-ஐச் சந்திக்கும் போது அவர்களுக்கு சாக்குப் போக்கு எதுவும் இருக்காது. கடவுள் சர்வ வல்லமை யுடைவர், ஞானம் மிக்கவர்.

[4:164] தூதர்கள் பற்றி உம்மிடம் கூறியும் உள்ளோம், மேலும் நாம் தூதர்களைப் பற்றி உம்மிடம் ஒரு போதும் கூறாமலும் உள்ளோம். மேலும் மோஸஸிடம் கடவுள் நேரடியாக பேசினார்.

[4:166] ஆனால் கடவுள் உமக்கு என்ன வெளிப்படுத்தி யுள்ளாரோ அதற்கு அவர் சாட்சியாக உள்ளார்; அவர் அதனைத் தன் பேரறிவைக் கொண்டு வெளிப்படுத்தியுள்ளார். மேலும் வானவர்களும் கூட சாட்சியாக உள்ளனர், ஆனால் சாட்சி யாளராக இருக்க கடவுள் போதுமானவர்.