குர்ஆன் 4:166 — பெண்கள்
ஆனால் கடவுள் உமக்கு என்ன வெளிப்படுத்தி யுள்ளாரோ அதற்கு அவர் சாட்சியாக உள்ளார்; அவர் அதனைத் தன் பேரறிவைக் கொண்டு வெளிப்படுத்தியுள்ளார். மேலும் வானவர்களும் கூட சாட்சியாக உள்ளனர், ஆனால் சாட்சி யாளராக இருக்க கடவுள் போதுமானவர்.
[4:165] நற்செய்திகளையும், அதே சமயம் எச்சரிக்கை களையும் ஒப்படைப்பவர்கள் தூதர்கள். இவ்விதமாக, இந்த தூதர்கள் அனைவரும் மனிதர்களிடம் வந்துவிட்ட பின்னர் கடவுள்-ஐச் சந்திக்கும் போது அவர்களுக்கு சாக்குப் போக்கு எதுவும் இருக்காது. கடவுள் சர்வ வல்லமை யுடைவர், ஞானம் மிக்கவர்.
[4:167] நிச்சயமாக, எவர்கள் நம்பமறுத்து, மேலும் கடவுள்-ன் பாதையைவிட்டும் தடுக்கின்றார்களோ அவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் வழிகெட்டுச் சென்றுவிட்டனர்.