குர்ஆன் 4:26 — பெண்கள்
கடவுள் உங்களுக்கு விஷயங்களை விளக்கி மேலும் கடந்த கால முன்னுதாரணங்களின் மூலமாக உங்களை வழி நடத்தி, மேலும் உங்களுக்கு மீட்சி அளிக்க விரும்புகின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[4:25] உங்களில் எவருக்கேனும் சுதந்திரமான நம்பிக்கை கொண்டபெண்களை-திருமணம் செய்ய இயலவில்லை என்றால் நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களை திருமணம் செய்து கொள்ள லாம். உங்களுடைய நம்பிக்கையை கடவுள் நன்கறிவார், மேலும் நம்பிக்கையைப் பொறுத்தவரை நீங்கள் ஒருவருக்கொருவர் சமமானவர்களே. நீங்கள் அவர்களைத் திருமணம் செய்வதற்கு முன்பு அவர்களுடைய பாதுகாவலரிடம் அனுமதி பெற வேண்டும், மேலும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய வரதட் சணையை நியாயமான முறையில் கொடுத்து விடவேண்டும். அவர்கள் விபச்சாரம் செய்யாமலும், அல்லது இரகசியக் காதலர்களை வைத்துக் கொள்ளாமலும், நீதமாக ஒழுக்கத்தைப் பேணிக் கொள்ளவேண்டும். திருமணம் மூலமாக சுதந்திரமடைந்த பின் அவர்கள் விபச்சாரம் செய்துவிட்டால் அவர்களுக்குரிய தண்டனை சுதந்திரமான பெண்களுக்குரிய தண்டனையில் பாதியாகும்.* அடிமையை திருமணம் செய்வது என்பது காத்திருக்க இயலாதவர்களுக்கு ஒரு இறுதி புகலிடமாகும். பொறுமையாக இருப்பது உங்களுக்கு சிறந்தது. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணை யாளர்.
[4:27] கடவுள், உங்களுக்கு மீட்சியளிக்க விரும்புகின்றார், அதே சமயம் தங்களுடைய சிற்றின்ப ஆசைகளை பின் தொடர்ந்து செல்பவர்கள், நீங்கள் நல்வழியினின்றும் விலகி பெருமளவில் வழி தவற வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.