குர்ஆன் 4:27 — பெண்கள்
கடவுள், உங்களுக்கு மீட்சியளிக்க விரும்புகின்றார், அதே சமயம் தங்களுடைய சிற்றின்ப ஆசைகளை பின் தொடர்ந்து செல்பவர்கள், நீங்கள் நல்வழியினின்றும் விலகி பெருமளவில் வழி தவற வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.
[4:26] கடவுள் உங்களுக்கு விஷயங்களை விளக்கி மேலும் கடந்த கால முன்னுதாரணங்களின் மூலமாக உங்களை வழி நடத்தி, மேலும் உங்களுக்கு மீட்சி அளிக்க விரும்புகின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[4:28] மனித இனம் பலவீனமாகப் படைக்கப்பட்டிருப் பதால் கடவுள் உங்கள் சுமைகளை இலேசாக்க விரும்பு கின்றார்.