Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:28 — பெண்கள்

மனித இனம் பலவீனமாகப் படைக்கப்பட்டிருப் பதால் கடவுள் உங்கள் சுமைகளை இலேசாக்க விரும்பு கின்றார்.

[4:27] கடவுள், உங்களுக்கு மீட்சியளிக்க விரும்புகின்றார், அதே சமயம் தங்களுடைய சிற்றின்ப ஆசைகளை பின் தொடர்ந்து செல்பவர்கள், நீங்கள் நல்வழியினின்றும் விலகி பெருமளவில் வழி தவற வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.

[4:29] நம்பிக்கை கொண்டோரே, ஒருவர் மற்றொருவர் சொத்துக்களை சட்ட விரோதமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்-ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் விவகாரங்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளன. நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளக் கூடாது. கடவுள் உங்கள் மீது கருணை நிறைந்தவராக இருக்கின்றார்.