குர்ஆன் 4:29 — பெண்கள்
நம்பிக்கை கொண்டோரே, ஒருவர் மற்றொருவர் சொத்துக்களை சட்ட விரோதமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்-ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் விவகாரங்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளன. நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளக் கூடாது. கடவுள் உங்கள் மீது கருணை நிறைந்தவராக இருக்கின்றார்.
[4:28] மனித இனம் பலவீனமாகப் படைக்கப்பட்டிருப் பதால் கடவுள் உங்கள் சுமைகளை இலேசாக்க விரும்பு கின்றார்.
[4:30] எவன் ஒருவன் கெட்ட எண்ணத்துடன் வேண்டு மென்றே இந்த வரம்பு மீறல்களைச் செய்கின்றானோ, அவனுக்கு நாம் நரகத்தை தண்டனையாக்குவோம். இதைச் செய்வது கடவுள்-க்கு எளிதானது.