குர்ஆன் 4:25 — பெண்கள்
உங்களில் எவருக்கேனும் சுதந்திரமான நம்பிக்கை கொண்டபெண்களை-திருமணம் செய்ய இயலவில்லை என்றால் நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களை திருமணம் செய்து கொள்ள லாம். உங்களுடைய நம்பிக்கையை கடவுள் நன்கறிவார், மேலும் நம்பிக்கையைப் பொறுத்தவரை நீங்கள் ஒருவருக்கொருவர் சமமானவர்களே. நீங்கள் அவர்களைத் திருமணம் செய்வதற்கு முன்பு அவர்களுடைய பாதுகாவலரிடம் அனுமதி பெற வேண்டும், மேலும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய வரதட் சணையை நியாயமான முறையில் கொடுத்து விடவேண்டும். அவர்கள் விபச்சாரம் செய்யாமலும், அல்லது இரகசியக் காதலர்களை வைத்துக் கொள்ளாமலும், நீதமாக ஒழுக்கத்தைப் பேணிக் கொள்ளவேண்டும். திருமணம் மூலமாக சுதந்திரமடைந்த பின் அவர்கள் விபச்சாரம் செய்துவிட்டால் அவர்களுக்குரிய தண்டனை சுதந்திரமான பெண்களுக்குரிய தண்டனையில் பாதியாகும்.* அடிமையை திருமணம் செய்வது என்பது காத்திருக்க இயலாதவர்களுக்கு ஒரு இறுதி புகலிடமாகும். பொறுமையாக இருப்பது உங்களுக்கு சிறந்தது. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணை யாளர்.
[4:24] இன்னும் ஏற்கனவே திருமணம் ஆன பெண்கள், உங்களுடன்* போரிடும் அவர்களுடைய நம்பமறுக்கும் கணவர்களை விட்டு விட்டு புகலிடம் தேடி உங்களிடம் வந்தாலேயன்றி அவர்களை திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டு ள்ளது. இவை உங்களுக்கு கடவுள்-ன் கட்டளைகள் ஆகும். மற்ற அனைத்து வகையினரையும் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய வரதட்சணைகளை கொடுத்து திருமணம் செய்து கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் விபச்சாரம் செய்யாமல் உங்களுடைய நல்லொழுக்கத்தைப் பேணிக் கொள்ளுங்கள். இவ்விதமாக, அவர்களில் எவரை நீங்கள் விரும்புகின்றீர்களோ அவர் களுக்கு தீர்மானிக்கப்பட்ட வரதட்சணையை அவர்களிடம் கொடுத்து விட வேண்டும். நீங்கள் ஒருவருக் கொருவர் ஒப்புக் கொண்டு வரதட்சணையில் அனுசரித்துச் செல்வதில் தவறில்லை. கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[4:26] கடவுள் உங்களுக்கு விஷயங்களை விளக்கி மேலும் கடந்த கால முன்னுதாரணங்களின் மூலமாக உங்களை வழி நடத்தி, மேலும் உங்களுக்கு மீட்சி அளிக்க விரும்புகின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.