குர்ஆன் 4:31 — பெண்கள்
உங்களுக்கு தடுக்கப்பட்ட பெரும் பாவங்கள் செய்வதை, நீங்கள் தவிர்த்துக் கொண்டால் நாம் உங்கள் பாவங்களை மன்னித்து, மேலும் உங்களை ஒரு கண்ணியமான இடத்தில் பிரவேசிக்க அனுமதிப்போம்.
[4:30] எவன் ஒருவன் கெட்ட எண்ணத்துடன் வேண்டு மென்றே இந்த வரம்பு மீறல்களைச் செய்கின்றானோ, அவனுக்கு நாம் நரகத்தை தண்டனையாக்குவோம். இதைச் செய்வது கடவுள்-க்கு எளிதானது.
[4:32] கடவுள்-ஆல் வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்ட தன்மைகளை அடைய வேண்டும் என்று நீங்கள் பேராசைப்படாதீர்கள். ஆண்கள் சில குறிப்பிட்ட தன்மைகளை அனுபவிக்கின்றார்கள், மேலும் பெண்கள் சில குறிப்பிட்ட தன்மைகளை அனுபவிக்கின்றார்கள். நீங்கள் கடவுள்-இடம் அவருடைய அருளைப் பொழியும்படி இறைஞ்சிப் பிரார்த்திக்கலாம். கடவுள் அனைத்துப் பொருட் களையும் முழுவதும் அறிந்தவராக இருக்கின்றார்.