குர்ஆன் 4:32 — பெண்கள்
கடவுள்-ஆல் வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்ட தன்மைகளை அடைய வேண்டும் என்று நீங்கள் பேராசைப்படாதீர்கள். ஆண்கள் சில குறிப்பிட்ட தன்மைகளை அனுபவிக்கின்றார்கள், மேலும் பெண்கள் சில குறிப்பிட்ட தன்மைகளை அனுபவிக்கின்றார்கள். நீங்கள் கடவுள்-இடம் அவருடைய அருளைப் பொழியும்படி இறைஞ்சிப் பிரார்த்திக்கலாம். கடவுள் அனைத்துப் பொருட் களையும் முழுவதும் அறிந்தவராக இருக்கின்றார்.
[4:31] உங்களுக்கு தடுக்கப்பட்ட பெரும் பாவங்கள் செய்வதை, நீங்கள் தவிர்த்துக் கொண்டால் நாம் உங்கள் பாவங்களை மன்னித்து, மேலும் உங்களை ஒரு கண்ணியமான இடத்தில் பிரவேசிக்க அனுமதிப்போம்.
[4:33] பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் விட்டுச் சென்ற பரம்பரை சொத்துக்களில் இருந்து உங்கள் ஒவ்வொருவரின் பங்கை நாம் நிர்ணயித்துள்ளோம். கூடுதலாக திருமணம் மூலம் உங்களுக்கு உறவினர்களானவர்களுக்கு, அவர்களுக்குரிய பங்கை நீங்கள் அவர்களுக்கு கொடுத்து விட வேண்டும். கடவுள் எல்லாவற்றையும் பார்க்கின்றார்.