குர்ஆன் 4:33 — பெண்கள்
பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் விட்டுச் சென்ற பரம்பரை சொத்துக்களில் இருந்து உங்கள் ஒவ்வொருவரின் பங்கை நாம் நிர்ணயித்துள்ளோம். கூடுதலாக திருமணம் மூலம் உங்களுக்கு உறவினர்களானவர்களுக்கு, அவர்களுக்குரிய பங்கை நீங்கள் அவர்களுக்கு கொடுத்து விட வேண்டும். கடவுள் எல்லாவற்றையும் பார்க்கின்றார்.
[4:32] கடவுள்-ஆல் வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்ட தன்மைகளை அடைய வேண்டும் என்று நீங்கள் பேராசைப்படாதீர்கள். ஆண்கள் சில குறிப்பிட்ட தன்மைகளை அனுபவிக்கின்றார்கள், மேலும் பெண்கள் சில குறிப்பிட்ட தன்மைகளை அனுபவிக்கின்றார்கள். நீங்கள் கடவுள்-இடம் அவருடைய அருளைப் பொழியும்படி இறைஞ்சிப் பிரார்த்திக்கலாம். கடவுள் அனைத்துப் பொருட் களையும் முழுவதும் அறிந்தவராக இருக்கின்றார்.
[4:34] ஆண்கள், பெண்களுக்கு** பொறுப்பாளர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். மேலும் கடவுள் அவர் களுக்கு குறிப்பிட்ட தன்மைகளை கொடுத் துள்ளார், மேலும் அவர்களை வருமானம் ஈட்டுபவர்களாகவும் ஆக்கியுள்ளார். இது கடவுள்-ன் கட்டளையாக இருப்பதால் நன்னெறியுடைய பெண்கள் இந்த ஒப்பந்தத்தை முழுமனதுடன் ஏற்றுக் கொள்வார்கள், மேலும் அவர்களுடைய கணவர்களுக்கு அவர்கள் இல்லாத நேரத்திலும் மதிப்பளிப்பார்கள். நீங்கள் பெண்களிடமிருந்து கலகத்தை அனுபவிக்க நேர்ந்தால் முதலில் அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தவேண்டும், பின்னர் படுக்கையை விட்டு விலக்கிவைத்தல் (போன்ற எதிர் மாறான நடவடிக்கைகளைப் பயன் படுதலாம்) அதன் பின்னர் (கடைசி மாற்று வழியாக) அவர்களை அடிக்கலாம். அவர்கள், உங்களுக்கு கீழ்படிந்தால் அவர்களுக்கெதிராக வரம்பு மீறுவதற்கு உங்களுக்கு அனுமதி இல்லை. கடவுள் மிக உயர்ந்தவர், மேலான அதிகாரம் உடையவர்.