Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:34 — பெண்கள்

ஆண்கள், பெண்களுக்கு** பொறுப்பாளர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். மேலும் கடவுள் அவர் களுக்கு குறிப்பிட்ட தன்மைகளை கொடுத் துள்ளார், மேலும் அவர்களை வருமானம் ஈட்டுபவர்களாகவும் ஆக்கியுள்ளார். இது கடவுள்-ன் கட்டளையாக இருப்பதால் நன்னெறியுடைய பெண்கள் இந்த ஒப்பந்தத்தை முழுமனதுடன் ஏற்றுக் கொள்வார்கள், மேலும் அவர்களுடைய கணவர்களுக்கு அவர்கள் இல்லாத நேரத்திலும் மதிப்பளிப்பார்கள். நீங்கள் பெண்களிடமிருந்து கலகத்தை அனுபவிக்க நேர்ந்தால் முதலில் அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தவேண்டும், பின்னர் படுக்கையை விட்டு விலக்கிவைத்தல் (போன்ற எதிர் மாறான நடவடிக்கைகளைப் பயன் படுதலாம்) அதன் பின்னர் (கடைசி மாற்று வழியாக) அவர்களை அடிக்கலாம். அவர்கள், உங்களுக்கு கீழ்படிந்தால் அவர்களுக்கெதிராக வரம்பு மீறுவதற்கு உங்களுக்கு அனுமதி இல்லை. கடவுள் மிக உயர்ந்தவர், மேலான அதிகாரம் உடையவர்.

[4:33] பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் விட்டுச் சென்ற பரம்பரை சொத்துக்களில் இருந்து உங்கள் ஒவ்வொருவரின் பங்கை நாம் நிர்ணயித்துள்ளோம். கூடுதலாக திருமணம் மூலம் உங்களுக்கு உறவினர்களானவர்களுக்கு, அவர்களுக்குரிய பங்கை நீங்கள் அவர்களுக்கு கொடுத்து விட வேண்டும். கடவுள் எல்லாவற்றையும் பார்க்கின்றார்.

[4:35] ஒரு தம்பதியர், பிரிந்துவிடக் கூடும் என்று அஞ்சினால் நீங்கள் கணவனுடைய குடும்பத்தில் இருந்து ஒரு மத்தியஸ்தரையும், மேலும் மனைவி யின் குடும்பத்தில் இருந்து ஒரு மத்தியஸ் தரையும், நியமிக்க வேண்டும்; அவர்கள் சமாதானமாகிவிட தீர்மானித்தால் அவர்கள் ஒன்று சேர்வதற்கு கடவுள் உதவிசெய்வார். கடவுள் எல்லாம் அறிந்தவர், நன்கறிந்தவர்.