குர்ஆன் 4:36 — பெண்கள்
நீங்கள் கடவுள் -ஐ மட்டும் வழிபட வேண்டும் - அவருடன் எந்த ஒன்றையும் இணைக்கக் கூடாது. நீங்கள் பெற்றோர்களுக்கும் உறவினர் களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டார்க்கும், உறவினர் அல்லாத அண்டை வீட்டார்க்கும், நெருங்கிய கூட்டாளிகளுக்கும், வேற்று மனிதர்களான வழிப்போக்கர்களுக்கும் மேலும் உங்கள் பணியாட்களுக்கும் உரிய மதிப்பளியுங்கள். கடவுள் இறுமாப்பு காட்டுபவர்களை நேசிப் பதில்லை.
[4:35] ஒரு தம்பதியர், பிரிந்துவிடக் கூடும் என்று அஞ்சினால் நீங்கள் கணவனுடைய குடும்பத்தில் இருந்து ஒரு மத்தியஸ்தரையும், மேலும் மனைவி யின் குடும்பத்தில் இருந்து ஒரு மத்தியஸ் தரையும், நியமிக்க வேண்டும்; அவர்கள் சமாதானமாகிவிட தீர்மானித்தால் அவர்கள் ஒன்று சேர்வதற்கு கடவுள் உதவிசெய்வார். கடவுள் எல்லாம் அறிந்தவர், நன்கறிந்தவர்.
[4:37] அவர்கள், கடவுள் அவருடைய அருட்கொடை யில் இருந்து வழங்கியதை மறைத்து, தானும் கஞ்சத்தனம் செய்து பிறரையும் கஞ்சத்தனம் செய்ய உபதேசிப்பவர்கள். நாம் நம்ப மறுப்பவர் களுக்கு ஒரு இழிவான தண்டனையை தயார் செய்து வைத்துள்ளோம்.