Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:37 — பெண்கள்

அவர்கள், கடவுள் அவருடைய அருட்கொடை யில் இருந்து வழங்கியதை மறைத்து, தானும் கஞ்சத்தனம் செய்து பிறரையும் கஞ்சத்தனம் செய்ய உபதேசிப்பவர்கள். நாம் நம்ப மறுப்பவர் களுக்கு ஒரு இழிவான தண்டனையை தயார் செய்து வைத்துள்ளோம்.

[4:36] நீங்கள் கடவுள் -ஐ மட்டும் வழிபட வேண்டும் - அவருடன் எந்த ஒன்றையும் இணைக்கக் கூடாது. நீங்கள் பெற்றோர்களுக்கும் உறவினர் களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டார்க்கும், உறவினர் அல்லாத அண்டை வீட்டார்க்கும், நெருங்கிய கூட்டாளிகளுக்கும், வேற்று மனிதர்களான வழிப்போக்கர்களுக்கும் மேலும் உங்கள் பணியாட்களுக்கும் உரிய மதிப்பளியுங்கள். கடவுள் இறுமாப்பு காட்டுபவர்களை நேசிப் பதில்லை.

[4:38] கடவுள்-ஐயும் இறுதி நாளையும் நம்ப மறுத்த நிலையில் அவர்கள் காட்டிக் கொள்வதற்காக மட்டுமே பணத்தை தர்மம் கொடுக்கின்றார்கள். ஒருவனது கூட்டாளியாக சாத்தான் இருந்தால், அவன் மிக மோசமான கூட்டாளி ஆவான்.