Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:41 — பெண்கள்

இவ்விதமாக (தீர்ப்பளிக்கும்) அந்த நாள் வரும் போது ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒரு சாட்சி யாளரை நாம் அழைப்போம். மேலும் (தூதராகிய) நீரும் இந்த மக்களுக்கிடையில் ஒரு சாட்சியாளராக பணியாற்றுவீர்.

[4:40] கடவுள் ஒரு அணு அளவு கூட அநீதி இழைக்க மாட்டார். அதற்கு மாறாக அவர் நன்னெறியான செயலுக்குரிய வெகுமதியை பன்மடங்காக்கி பெருக்குகின்றார். மேலும் அவரிடமிருந்து உயர்ந்த வெகுமானங்களையும் வழங்குகின்றார்.

[4:42] அந்த நாளில், நம்ப மறுத்தவர்களும் மேலும் தூதருக்கு கீழ்படியாதவர்களும் தாங்கள் மண்ணோடு மண்ணாகி இருக்க வேண்டும் என்று விரும்பு வார்கள்; ஒரே ஒரு சொல்லைக் கூட அவர்களால் கடவுள்-இடமிருந்து மறைக்க இயலாது.