Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:42 — பெண்கள்

அந்த நாளில், நம்ப மறுத்தவர்களும் மேலும் தூதருக்கு கீழ்படியாதவர்களும் தாங்கள் மண்ணோடு மண்ணாகி இருக்க வேண்டும் என்று விரும்பு வார்கள்; ஒரே ஒரு சொல்லைக் கூட அவர்களால் கடவுள்-இடமிருந்து மறைக்க இயலாது.

[4:41] இவ்விதமாக (தீர்ப்பளிக்கும்) அந்த நாள் வரும் போது ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒரு சாட்சி யாளரை நாம் அழைப்போம். மேலும் (தூதராகிய) நீரும் இந்த மக்களுக்கிடையில் ஒரு சாட்சியாளராக பணியாற்றுவீர்.

[4:43] நம்பிக்கை கொண்டோரே, போதையில் இருக்கும் போது நீங்கள் தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்க வேண்டாம், ஏனெனில் நீங்கள் கூறுவது இன்னதென்று உங்களுக்குத் தெரிய வேண்டும். நீங்கள் சாலைகளில் பயணத்தில் இருந்தாலன்றி தாம்பத்ய உறவிற்குப் பின்னர் குளிக்காமல் தொழக் கூடாது; நீங்கள் நோயுற்று இருந்தாலோ, அல்லது பிரயாணத்திலிருந்தாலோ அல்லது சிறுநீர் கழித்திருந்தாலோ அல்லது வயிற்றில் இருந்து எதுவும் வெளியேறி இருந்தாலோ (காற்று போன்றவை) அல்லது பெண்களுடன் (தாம்பத்ய) உறவு கொண்டு விட்டாலோ மேலும் தண்ணீர் கிடைக்காவிட்டால், நீங்கள் சுத்தமான உலர்ந்த மண்ணைத் தொட்டு பிறகு உங்கள் முகங்களையும், கைகளையும் அதைக் கொண்டு தடவி தயம்மும் (உலர்ந்த அங்கசுத்தி) செய்து கொள்ளவும். கடவுள் பிழை பொறுப்பவர், மன்னிப்பவர்.