Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:47 — பெண்கள்

வேதத்தைப் பெற்றவர்களே, நாம் சில முகங்களை நாடுகடத்துவதற்காக துரத்துவதற்கு முன்னால், அல்லது ஸப்பத்தின் புனிதத் தன்மையை கெடுத்தவர்களை தண்டித்தது போல் தண்டிப் பதற்கு முன்னால், உங்களிடம் இருப்பதை மெய்ப் பிக்க கூடிய இந்த வெளிப்பாடுகளை நீங்கள் நம்ப வேண்டும். கடவுள்-ன் கட்டளை நடந்தே தீரும்.

[4:46] யூதர்களாக உள்ளவர்களில் சிலர் உண்மைக்குப் புறம்பாக வார்த்தைகளை சிதைக்கின்றார்கள். மேலும் அவர்கள் “நாங்கள் கேட்டுக் கொண்டோம், ஆனால் கீழ்படிய மாட்டோம்” மேலும் “உங்களுடைய வார்த்தைகள் செவிட்டு காதுகளின் மேல் விழுகின்றன,” மேலும் மார்க்கத்தை பரிகசிப்பதற்காக அவர்களுடைய நாக்குகளை சுழித்து “ராயினா”* (எங்களுடைய மேய்ப்பராக இரும்) என்று கூறுகின்றார்கள். அவர்கள் “நாங்கள் கேட்கின்றோம் மேலும் நாங்கள் கீழ்படிகின்றோம்” என்றும் மேலும் “நாங்கள் உங்களைச் செவியேற்கின்றோம்” மேலும் “உன்ளுர்னா” (எங்களை கண்காணிப் பீராக) என்றும் கூறியிருந்தால் அவர்களுக்கு அது சிறந்ததாகவும் மேலும் அதிக நன்னெறியான தாகவும் இருந்திருக்கும். அதற்கு பதிலாக அவர்களுடைய நம்பிக்கையின்மையால் அவர்கள் கடவுள்-இடமிருந்து தண்டனைக் குள்ளானார்கள். அதன் விளைவாக அவர்களில் பெரும்பான்மையானவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது.

[4:48] கடவுள் இணைத் தெய்வ வழிபாட்டை* மன்னிக்கமாட்டார், ஆனால் அவர் தான் நாடுவோருக்கு இதைவிடச் சிறிய குற்றங்களை மன்னிக்கின்றார். எவரொருவர் கடவுள்-உடன் இணைத் தெய்வங்களை ஏற்படுத்துகின்றாரோ, அவர் ஒரு பயங்கரமான குற்றத்தை செய்தவர் ஆவார்.