குர்ஆன் 4:48 — பெண்கள்
கடவுள் இணைத் தெய்வ வழிபாட்டை* மன்னிக்கமாட்டார், ஆனால் அவர் தான் நாடுவோருக்கு இதைவிடச் சிறிய குற்றங்களை மன்னிக்கின்றார். எவரொருவர் கடவுள்-உடன் இணைத் தெய்வங்களை ஏற்படுத்துகின்றாரோ, அவர் ஒரு பயங்கரமான குற்றத்தை செய்தவர் ஆவார்.
[4:47] வேதத்தைப் பெற்றவர்களே, நாம் சில முகங்களை நாடுகடத்துவதற்காக துரத்துவதற்கு முன்னால், அல்லது ஸப்பத்தின் புனிதத் தன்மையை கெடுத்தவர்களை தண்டித்தது போல் தண்டிப் பதற்கு முன்னால், உங்களிடம் இருப்பதை மெய்ப் பிக்க கூடிய இந்த வெளிப்பாடுகளை நீங்கள் நம்ப வேண்டும். கடவுள்-ன் கட்டளை நடந்தே தீரும்.
[4:49] தங்களை தாங்களே உயர்த்திக் கொள்பவர்களை நீர் கவனித்திருக்கின்றீரா? பதிலாக கடவுள் மட்டுமே சிறிதளவும் அநீதியின்றி தான் நாடு வோரை உயர்த்துகின்றார்.