Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:52 — பெண்கள்

இவர்கள்தான் கடவுள்-உடைய தண்டனைக் குள்ளானவர்கள், மேலும் யாரை கடவுள் தண்டிக்கின்றாரோ அவருக்கு எந்த உதவியாள ரையும் நீர் காணமாட்டீர்.

[4:51] வேதத்தின் ஒரு பகுதியை பெற்றவர்களை, மேலும் அவர்கள் எவ்வாறு இணைத்தெய்வ வழிபாட்டின் மீதும், பொய்யான கொள்கைகளின் மீதும் நம்பிக்கை கொண்டு விட்டு பின்னர், “நம்ப மறுப்பவர்கள் நம்பிக்கையாளர்களைக் காட்டிலும் சிறப்பாக வழி நடத்தப்பட்டவர்களாக இருக்கின்றனர்” என்று கூறுவதையும் நீர் கவனித்திருக்கின்றீரா?!

[4:53] ஆட்சி அதிகாரத்தில் ஒரு பங்கை அவர்கள் சொந்தமாக கொண்டிருக்கின்றனரா? அவ்வாறு இருந்தால் அவர்கள் மக்களுக்கு ஒரு தானியத்தின் அளவுகூட கொடுக்க மாட்டார்கள்.