குர்ஆன் 4:54 — பெண்கள்
கடவுள் அவருடைய அருட்கொடைகளை அவர்கள் மீது பொழிந்த காரணத்தால் மக்கள் மீது அவர்கள் பொறாமைப்படுகின்றார்களா? நாம் ஆப்ரஹாமின் குடும்பத்திற்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுத்தோம். நாம் அவர் களுக்கு ஒரு மகத்தான அதிகாரத்தைக் கொடுத்தோம்.
[4:53] ஆட்சி அதிகாரத்தில் ஒரு பங்கை அவர்கள் சொந்தமாக கொண்டிருக்கின்றனரா? அவ்வாறு இருந்தால் அவர்கள் மக்களுக்கு ஒரு தானியத்தின் அளவுகூட கொடுக்க மாட்டார்கள்.
[4:55] அவர்களில் சிலர் அதில் நம்பிக்கை கொண்டனர், மேலும் அவர்களில் சிலர் அதிலிருந்து வெறுப் புற்றுப் பின் வாங்கினர். இவர்களுக்கு நரகம் தான் சரியான தண்டனை ஆகும்.