குர்ஆன் 4:56 — பெண்கள்
நிச்சயமாக, நம்முடைய வெளிப்பாடுகளை நம்ப மறுப்பவர்களை நாம் நரக நெருப்பில் தண்டிப் போம். அவர்களுடைய தோல்கள் கருகிவிடும் போதெல்லாம், அவர்களுக்கு நாம் புதிய தோல்களை கொடுப்போம். இவ்விதமாக, அவர்கள் தொடர்ச்சியாக அவதிப்படுவார்கள். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[4:55] அவர்களில் சிலர் அதில் நம்பிக்கை கொண்டனர், மேலும் அவர்களில் சிலர் அதிலிருந்து வெறுப் புற்றுப் பின் வாங்கினர். இவர்களுக்கு நரகம் தான் சரியான தண்டனை ஆகும்.
[4:57] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தமட்டில், நாம் அவர்களை ஓடிக் கொண்டிருக்கும் நீரோடை களைக் கொண்ட தோட்டங்களுக்குள் அனுமதிப் போம்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். ஒரு பேரானந்தமான நிழலில் அவர்களை நாம் அனுமதிப்போம்.