குர்ஆன் 4:57 — பெண்கள்
நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தமட்டில், நாம் அவர்களை ஓடிக் கொண்டிருக்கும் நீரோடை களைக் கொண்ட தோட்டங்களுக்குள் அனுமதிப் போம்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். ஒரு பேரானந்தமான நிழலில் அவர்களை நாம் அனுமதிப்போம்.
[4:56] நிச்சயமாக, நம்முடைய வெளிப்பாடுகளை நம்ப மறுப்பவர்களை நாம் நரக நெருப்பில் தண்டிப் போம். அவர்களுடைய தோல்கள் கருகிவிடும் போதெல்லாம், அவர்களுக்கு நாம் புதிய தோல்களை கொடுப்போம். இவ்விதமாக, அவர்கள் தொடர்ச்சியாக அவதிப்படுவார்கள். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[4:58] மக்கள் உங்களிடம் நம்பி ஒப்படைத்தவற்றை, நீங்கள் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று கடவுள் கட்டளையிடுகின்றார். மக்களிடையே நீங்கள் தீர்ப்பு கூறினால், நீங்கள் நியாயமாக தீர்ப்பு கூற வேண்டும். கடவுள் எதை உங்களுக்கு பரிந்துரைக்கின்றாரோ, உண்மையில் அதுவே சிறந்த உபதேசமாகும். கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர்.