Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:58 — பெண்கள்

மக்கள் உங்களிடம் நம்பி ஒப்படைத்தவற்றை, நீங்கள் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று கடவுள் கட்டளையிடுகின்றார். மக்களிடையே நீங்கள் தீர்ப்பு கூறினால், நீங்கள் நியாயமாக தீர்ப்பு கூற வேண்டும். கடவுள் எதை உங்களுக்கு பரிந்துரைக்கின்றாரோ, உண்மையில் அதுவே சிறந்த உபதேசமாகும். கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர்.

[4:57] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தமட்டில், நாம் அவர்களை ஓடிக் கொண்டிருக்கும் நீரோடை களைக் கொண்ட தோட்டங்களுக்குள் அனுமதிப் போம்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். ஒரு பேரானந்தமான நிழலில் அவர்களை நாம் அனுமதிப்போம்.

[4:59] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-க்கு கீழ்படியுங்கள், மேலும் நீங்கள் தூதருக்கு கீழ்படியுங்கள், மேலும் உங்களில் அதிகாரம் பெற்றவர்களுக்கு கீழ்படியுங்கள். நீங்கள் கடவுள்-ன் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், ஏதாவது ஒரு விஷயத்தில் நீங்கள் சச்சரவு செய்தால், அதை நீங்கள் கடவுள்-இடமும் மேலும் தூதரிடமும் ஆலோசிக்க வேண்டும். இதுவே உங்களுக்கு சிறந்ததாகும், மேலும் உங்களுக்கு சிறந்த தீர்வைக் கொடுக்கும்.