Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:59 — பெண்கள்

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا أَطيعُوا اللَّهَ وَأَطيعُوا الرَّسولَ وَأُولِى الأَمرِ مِنكُم ۖ فَإِن تَنٰزَعتُم فى شَيءٍ فَرُدّوهُ إِلَى اللَّهِ وَالرَّسولِ إِن كُنتُم تُؤمِنونَ بِاللَّهِ وَاليَومِ الءاخِرِ ۚ ذٰلِكَ خَيرٌ وَأَحسَنُ تَأويلًا

நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-க்கு கீழ்படியுங்கள், மேலும் நீங்கள் தூதருக்கு கீழ்படியுங்கள், மேலும் உங்களில் அதிகாரம் பெற்றவர்களுக்கு கீழ்படியுங்கள். நீங்கள் கடவுள்-ன் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், ஏதாவது ஒரு விஷயத்தில் நீங்கள் சச்சரவு செய்தால், அதை நீங்கள் கடவுள்-இடமும் மேலும் தூதரிடமும் ஆலோசிக்க வேண்டும். இதுவே உங்களுக்கு சிறந்ததாகும், மேலும் உங்களுக்கு சிறந்த தீர்வைக் கொடுக்கும்.

[4:58] மக்கள் உங்களிடம் நம்பி ஒப்படைத்தவற்றை, நீங்கள் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று கடவுள் கட்டளையிடுகின்றார். மக்களிடையே நீங்கள் தீர்ப்பு கூறினால், நீங்கள் நியாயமாக தீர்ப்பு கூற வேண்டும். கடவுள் எதை உங்களுக்கு பரிந்துரைக்கின்றாரோ, உண்மையில் அதுவே சிறந்த உபதேசமாகும். கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர்.

[4:60] உமக்கு வெளிப்படுத்தப்பட்டதையும், மேலும் உமக்கு முன்னர் வெளிப்படுத்தப்பட்டதையும் நம்புகின்றோம், என்று கூறி, பின்னர் அவர் களுடைய இணைத்தெய்வங்களின் நேர்மையற்ற சட்டங்களை உறுதியாகக் கடைப்பிடிப்பவர்களை நீர் கவனித்திருக்கின்றீரா? அத்தகைய சட்டங் களைப்புறக் கணிக்க வேண்டும் என்று அவர்கள் கட்டளையிடப்பட்டிருந்தார்கள். உண்மையில், அவர்களை வெகுதூரம் வழிகேட்டில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது சாத்தானின் விருப்பமாகும்.