Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:60 — பெண்கள்

உமக்கு வெளிப்படுத்தப்பட்டதையும், மேலும் உமக்கு முன்னர் வெளிப்படுத்தப்பட்டதையும் நம்புகின்றோம், என்று கூறி, பின்னர் அவர் களுடைய இணைத்தெய்வங்களின் நேர்மையற்ற சட்டங்களை உறுதியாகக் கடைப்பிடிப்பவர்களை நீர் கவனித்திருக்கின்றீரா? அத்தகைய சட்டங் களைப்புறக் கணிக்க வேண்டும் என்று அவர்கள் கட்டளையிடப்பட்டிருந்தார்கள். உண்மையில், அவர்களை வெகுதூரம் வழிகேட்டில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது சாத்தானின் விருப்பமாகும்.

[4:59] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-க்கு கீழ்படியுங்கள், மேலும் நீங்கள் தூதருக்கு கீழ்படியுங்கள், மேலும் உங்களில் அதிகாரம் பெற்றவர்களுக்கு கீழ்படியுங்கள். நீங்கள் கடவுள்-ன் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், ஏதாவது ஒரு விஷயத்தில் நீங்கள் சச்சரவு செய்தால், அதை நீங்கள் கடவுள்-இடமும் மேலும் தூதரிடமும் ஆலோசிக்க வேண்டும். இதுவே உங்களுக்கு சிறந்ததாகும், மேலும் உங்களுக்கு சிறந்த தீர்வைக் கொடுக்கும்.

[4:61] “கடவுள் வெளிப்படுத்தியதின் பக்கமும், மேலும் தூதரின் பக்கமும் வாருங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், நயவஞ்சகர்கள் உங்களை முழுவதுமாக தவிர்த்து விடுவதை நீங்கள் காண்பீர்கள்.