குர்ஆன் 4:61 — பெண்கள்
“கடவுள் வெளிப்படுத்தியதின் பக்கமும், மேலும் தூதரின் பக்கமும் வாருங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், நயவஞ்சகர்கள் உங்களை முழுவதுமாக தவிர்த்து விடுவதை நீங்கள் காண்பீர்கள்.
[4:60] உமக்கு வெளிப்படுத்தப்பட்டதையும், மேலும் உமக்கு முன்னர் வெளிப்படுத்தப்பட்டதையும் நம்புகின்றோம், என்று கூறி, பின்னர் அவர் களுடைய இணைத்தெய்வங்களின் நேர்மையற்ற சட்டங்களை உறுதியாகக் கடைப்பிடிப்பவர்களை நீர் கவனித்திருக்கின்றீரா? அத்தகைய சட்டங் களைப்புறக் கணிக்க வேண்டும் என்று அவர்கள் கட்டளையிடப்பட்டிருந்தார்கள். உண்மையில், அவர்களை வெகுதூரம் வழிகேட்டில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது சாத்தானின் விருப்பமாகும்.
[4:62] அவர்கள் செய்த செயல்களின் விளைவாக அவர்களை ஒரு பேரழிவு தாக்கும் போது அது எவ்வாறு இருக்கும்? அப்போது அவர்கள் உம்மிடம் வந்து, “எங்களுடைய எண்ணங்கள் நல்லதாகவும் மேலும் நன்னெறியானதாகவும் இருந்தது!” என்று கடவுள் மீது சத்தியம் செய்வார்கள் .