குர்ஆன் 4:8 — பெண்கள்
வாரிசு சொத்துக்களைப் பங்கிடும் போது உறவினர்களும், அநாதைகளும், மேலும் தேவை உடையவர்களும் அங்கு இருந்தால், நீங்கள் அதி லிருந்து அவர்களுக்கும் கொடுக்க வேண்டும், மேலும் அவர்களை கனிவுடன் நடத்த வேண்டும்.
[4:7] பெற்றோர்களும் மற்றும் உறவினர்களும் விட்டுச் சென்றதில் ஆண்களுக்கு ஒரு பங்குண்டு. பெற்றோர்களும் உறவினர்களும் விட்டுச் சென்றதில் பெண்களுக்கும் ஒரு பங்குண்டு. வாரிசுச் சொத்து குறைவாக இருந்தாலும் சரி, அல்லது அதிகமாக இருந்தாலும் சரி, நிச்சயமாக ஒரு பங்கு (பெண்கள் அடைந்தே தீர வேண்டும்).
[4:9] தங்களுக்குப் பின்னால் தங்களுடைய சொந்தக் குழந்தைகளை விட்டுச் செல்வது பற்றி கவலைப் படுபவர்கள், கடவுள்-ஐ கவனத்தில் கொண்டும் மேலும் நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.