Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:7 — பெண்கள்

பெற்றோர்களும் மற்றும் உறவினர்களும் விட்டுச் சென்றதில் ஆண்களுக்கு ஒரு பங்குண்டு. பெற்றோர்களும் உறவினர்களும் விட்டுச் சென்றதில் பெண்களுக்கும் ஒரு பங்குண்டு. வாரிசுச் சொத்து குறைவாக இருந்தாலும் சரி, அல்லது அதிகமாக இருந்தாலும் சரி, நிச்சயமாக ஒரு பங்கு (பெண்கள் அடைந்தே தீர வேண்டும்).

[4:6] அநாதைகள் தக்க பருவம் அடைந்துவிட்டால் அவர்களை நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். போதுமான பக்குவத்தை அவர்கள் அடைந்துவிட்டதை நீங்கள் கண்டறிந்த உடனே அவர்களுடைய சொத்துக்களை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள். அவற்றை அவர்கள் வளர்ச்சி அடைவதற்கு முன்பு விரைவாக, ஊதாரித்தனமாக செலவழித்து விடாதீர்கள். வசதி படைத்த பாதுகாவலர் கூலி எதையும் பெறக் கூடாது. ஆனால், ஏழையான பாதுகாவலர் நியாயமான கூலியைப் பெறலாம். அவர்களுடைய சொத்துக்களை அவர்களிடம் கொடுக்கும் போது நீங்கள் சாட்சியாளர்களை வைத்துக் கொள்ள வேண்டும். கணக்கிடுபவராக கடவுள் போதுமானவர்.

[4:8] வாரிசு சொத்துக்களைப் பங்கிடும் போது உறவினர்களும், அநாதைகளும், மேலும் தேவை உடையவர்களும் அங்கு இருந்தால், நீங்கள் அதி லிருந்து அவர்களுக்கும் கொடுக்க வேண்டும், மேலும் அவர்களை கனிவுடன் நடத்த வேண்டும்.