குர்ஆன் 4:6 — பெண்கள்
وَابتَلُوا اليَتٰمىٰ حَتّىٰ إِذا بَلَغُوا النِّكاحَ فَإِن ءانَستُم مِنهُم رُشدًا فَادفَعوا إِلَيهِم أَموٰلَهُم ۖ وَلا تَأكُلوها إِسرافًا وَبِدارًا أَن يَكبَروا ۚ وَمَن كانَ غَنِيًّا فَليَستَعفِف ۖ وَمَن كانَ فَقيرًا فَليَأكُل بِالمَعروفِ ۚ فَإِذا دَفَعتُم إِلَيهِم أَموٰلَهُم فَأَشهِدوا عَلَيهِم ۚ وَكَفىٰ بِاللَّهِ حَسيبًا
அநாதைகள் தக்க பருவம் அடைந்துவிட்டால் அவர்களை நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். போதுமான பக்குவத்தை அவர்கள் அடைந்துவிட்டதை நீங்கள் கண்டறிந்த உடனே அவர்களுடைய சொத்துக்களை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள். அவற்றை அவர்கள் வளர்ச்சி அடைவதற்கு முன்பு விரைவாக, ஊதாரித்தனமாக செலவழித்து விடாதீர்கள். வசதி படைத்த பாதுகாவலர் கூலி எதையும் பெறக் கூடாது. ஆனால், ஏழையான பாதுகாவலர் நியாயமான கூலியைப் பெறலாம். அவர்களுடைய சொத்துக்களை அவர்களிடம் கொடுக்கும் போது நீங்கள் சாட்சியாளர்களை வைத்துக் கொள்ள வேண்டும். கணக்கிடுபவராக கடவுள் போதுமானவர்.
[4:5] கடவுள் உங்களை பாதுகாப்பாளர்களாக்கி ஒப்படைத்திருக்கின்ற அநாதைகளின் சொத்துக் களை அவர்கள் பக்குவமடைவதற்கு முன்பு கொடுத்து விடாதீர்கள். நீங்கள் அதிலிருந்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும், மேலும் அவர்களுக்கு ஆடை அணிவியுங்கள், மேலும் அவர்களைக் கனிவுடன் நடத்துங்கள்.
[4:7] பெற்றோர்களும் மற்றும் உறவினர்களும் விட்டுச் சென்றதில் ஆண்களுக்கு ஒரு பங்குண்டு. பெற்றோர்களும் உறவினர்களும் விட்டுச் சென்றதில் பெண்களுக்கும் ஒரு பங்குண்டு. வாரிசுச் சொத்து குறைவாக இருந்தாலும் சரி, அல்லது அதிகமாக இருந்தாலும் சரி, நிச்சயமாக ஒரு பங்கு (பெண்கள் அடைந்தே தீர வேண்டும்).