குர்ஆன் 4:5 — பெண்கள்
கடவுள் உங்களை பாதுகாப்பாளர்களாக்கி ஒப்படைத்திருக்கின்ற அநாதைகளின் சொத்துக் களை அவர்கள் பக்குவமடைவதற்கு முன்பு கொடுத்து விடாதீர்கள். நீங்கள் அதிலிருந்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும், மேலும் அவர்களுக்கு ஆடை அணிவியுங்கள், மேலும் அவர்களைக் கனிவுடன் நடத்துங்கள்.
[4:4] நீங்கள் பெண்களுக்கு அவர்களுக்கு தகுந்த வரதட்சணைகளை நியாயமாக கொடுக்க வேண்டும். அவர்கள் தாமாக விரும்பி எதையாவது விட்டுக் கொடுத்தால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளலாம். அது உங்களுக்கு உரிமையுடையதாகும்.
[4:6] அநாதைகள் தக்க பருவம் அடைந்துவிட்டால் அவர்களை நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். போதுமான பக்குவத்தை அவர்கள் அடைந்துவிட்டதை நீங்கள் கண்டறிந்த உடனே அவர்களுடைய சொத்துக்களை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள். அவற்றை அவர்கள் வளர்ச்சி அடைவதற்கு முன்பு விரைவாக, ஊதாரித்தனமாக செலவழித்து விடாதீர்கள். வசதி படைத்த பாதுகாவலர் கூலி எதையும் பெறக் கூடாது. ஆனால், ஏழையான பாதுகாவலர் நியாயமான கூலியைப் பெறலாம். அவர்களுடைய சொத்துக்களை அவர்களிடம் கொடுக்கும் போது நீங்கள் சாட்சியாளர்களை வைத்துக் கொள்ள வேண்டும். கணக்கிடுபவராக கடவுள் போதுமானவர்.