குர்ஆன் 4:83 — பெண்கள்
பாதுகாப்பை பாதிக்கும் ஒரு வதந்தி அவர் களுடைய வழியில் வரும்போது அதை அவர்கள் பரப்பி விடுகின்றார்கள். அதை அவர்கள் தூதரி டமும் மேலும் அவர்களில் அதிகாரம் பெற்றவர் களிடமும் ஆலோசனை செய்திருந்தால், இந்த விஷயங்களை புரிந்து கொள்பவர்கள் அவர்களுக்கு தெரிவித்திருப்பார்கள். கடவுள்-உடைய அருளும் மேலும் அவருடைய கருணை யும் உங்கள் பால் இல்லாதிருந்திருக்கு மேயானால், ஒரு சிலரைத் தவிர, நீங்கள் சாத்தானை பின்பற்றியிருப்பீர்கள்.
[4:82] அவர்கள் குர்ஆனை ஏன் மிகவும் கவனத்துடன் ஆராய்வதில்லை? கடவுள்-ஐத் தவிர வேறு யாரிடமிருந்தும் இது வந்திருந்தால் இதில் அவர்கள் எண்ணற்ற முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.*
[4:84] கடவுள்-ன் நிமித்தம் நீங்கள் சண்டையிட வேண்டும். உங்களுடைய சொந்த ஆன்மாவிற்கு மட்டுமே நீங்கள் பொறுப்பாளியாவீர்கள். மேலும் நம்பிக்கையாளர்களையும் இவ்வாறே செய்யும்படி உபதேசிப்பீராக. நம்பமறுப்பவர்களின் ஆற்றலைக் கடவுள் கட்டுப்படுத்தி விடுவார். கடவுள் மிக அதிகமான ஆற்றலும், மேலும் மிக அதிகமான வல்லமையும் உடையவர்.